Subscribe Now!

Enter your email address:

Thursday, December 15, 2016

HOW TO DO UMRAH IN TAMIL

ஷஹீஹுல் புஹாரி நபிமொழித் தொகுப்பின் 26வது அத்தியாயம் “உம்ரா” வழிபாடு தொடர்பானதாகும். “உம்ரா” எனும் சொல்லுக்கு ‘சந்தித்தல்’ என்பது சொற்பொருளாகும். புனிதத் தலங்களைச் சந்திக்கும் வாய்ப்பு ‘உம்ரா’ வழிபாட்டில் கிடைப்பதால் அதற்கு இப்பெயர் வந்திருக்கலாம்.

புனித “கஅபா” சென்று அதைச் சுற்றி (தவாஃப்) வருதல், ஸஃபா – மர்வா மலைக்குன்றுகளுக்கிடையே ஓடுதல் (சயீ) ஆகிய கிரியைகளை நிறைவேற்றுவதே இஸ்லாமியர் வழக்கில் ‘உம்ரா’ எனப்படும். ஹஜ் வழிபாட்டிற்கு குறித்த காலம் உண்டு. “உம்ரா”வுக்கு குறிப்பிட்ட காலவரையறை கிடையாது. உம்ராவும் ஹஜ்ஜைப் போன்றே கட்டாயக் கடமைதான்; அதைச் செய்வதற்குச் சக்தியுள்ளோர் அதையும் செய்தாக வேண்டும் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். வேறுசில அறிஞர்கள், உம்ரா கூடுதல் வழிபாடு (சுன்னா) தான்; கட்டாயமல்ல என்கிறார்கள்.

அல் குர்ஆனில், “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்” (2:196)

STEP BY STEP TO DO UMRAH IN TAMIL BRIEFLY

இங்கு  உம்ரா செய்ய தமிழ் மொழியில் விளக்கமாக கூறப்பட்டு உள்ளது 

1. மீக்காத் எல்லையில்  குளித்து  அல்லது ஓது(ஒழு) செய்து  இஹ்ராம் உடை  அணிதிகொள்வது கொள்வது மற்றும் உம்ரா நிய்யத்து செய்து கொள்வது. 

பிறகு இரண்டு ரகத் நபில்  தொழுந்து  கொள்வது 


உம்ரா நிய்யத்து தமிழில் Umrah niyyat in Tamil



2. கஃபதுல்லாவை  தவாப் செய்வது (7 முறை):


முதல் முறை கஃபதுல்லாஹ் பார்க்கும் பொழுது அதிகமாக துஆ செய்ய வேண்டும் . இந்த துஆ கபூல் ஆகுகிறது


3. ஸயீ   செய்வது



4. முழு தலையில் முடி வெட்டுதல்  (அல்லது) உங்கள் தலையைச் சிரைத்து (மொட்டை அடித்து கொள்வது)  (அல்லது) முழு தலையில் ஹேர்  (முடி) ட்ரிம் செய்து கொள்வது



இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை

இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை சில காரியங்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம். 

1. இஹ்ராம் கட்டியவர் அந்த நிலையில் திருமண ஒப்பந்தம் செய்தல், திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

“இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக்கூடாது. பிறருக்கு திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
நூல்கள்; : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா.

2. மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர் இஹ்ராம் கட்டிய நிலையில் மனைவியுடன் கூடக்கூடாது.
“ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட சில மாதங்களாகும். யாரேனும் அம்மாதங்களில் ஹஜ்ஜை தன் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சச்சரவில் ஈடுபடுவது ஆகியவை கூடாது.”
அல்குர்ஆன் - 2 : 197 

இஹ்ராம் கட்டியவர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்பதைக் கூறுவதுடன், வீணான விவாதங்கள், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் இந்த வசனம் தடை செய்கின்றது. 

3. இஹ்ராம் கட்டியவர் எந்த உயிர்ப்பிராணியையும் கொல்லக்கூடாது; உண்பதற்காக வேட்டையாடக் கூடாது; தனக்காக வேட்டையாடுமாறு பிறரைத் தூண்டவும் கூடாது. 

“நம்பிக்கையாளர்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். ஏனென்றால், மறைவில் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு”. அல்குர்ஆன் - 5:94

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள். உங்களில் யாரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றைப் பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். அதை உங்களில் நேர்மைமிக்க இருவர் முடிவு செய்யவேண்டும். அது கஃபாவை அடைய வேண்டிய பலிப்பிராணியாகும். அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் - 5:95

“உங்களுக்கும் இதரபிராணிகளுக்கும் பயனளிக்கும் பொருட்டு (இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதில் கிடைக்கும் உணவுப் பொருட்களும் ஹலாலாக ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது”. அல்குர்ஆன் - 5:96 


ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196 

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

அமல்களில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது” என்று விடையளித்தார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது” என்றார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

“ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் பலவீனனாக இருக்கிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “யுத்தமில்லாத ஜிஹாதுக்கு செல்வீராக! அதுதான் ஹஜ்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் பின் அலி (ரலி) நூல் : தப்ரானி

அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்;” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்; : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

ஹஜ் செய்பவர், உம்ராச் செய்பவர், போரில் ஈடுபட்டவர் ஆகிய மூவர் அல்லாஹ்வின் விருந்தினராவர் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : இப்னுஹிப்பான், இப்னுமாஜா

ஹஜ் செய்பவர்களும் உம்ராச் செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினராவர். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான் என்பதும் நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : நஸயீ, இப்னுமாஜா

இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் அறிவிக்கின்றன. அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுவதும், கேட்டவையாவும் கிடைப்பதும், மறுமையில் சுவனத்தைப் பரிசாக அடைவதும் உண்மை முஸ்லிம்களுக்குச் சாதாரண விஷயம் இல்லை.

HOW TO DO UMRAH IN TAMIL

தல்பியாவின் வாசகம் வருமாறு:

நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைபா என்ற இடத்திலமைந்த பள்ளிக்கருகில் அவர்களின் வாகனம் எழுந்து நின்றதும், அதன் மேல் அமர்ந்து “அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.


பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.

இந்த பகுதியில்  தவறு அல்லது பிழை  இருந்தால்  இந்த ஈமெயில் அணுகவும் amdileeyas@gmail.com  பிறகு சரி பார்த்து  திருத்த படும்.

 அல்லாஹ் உங்களது இந்த உம்ராப் பயணமத்தை கபூல் செய்வானாக , அமீன் ரப்பில் ஆலமீன். உங்களுடைய துஆவில் இந்த அடியானுக்கும்  துஆ செய்விராக.







0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...