ஷஹீஹுல் புஹாரி நபிமொழித் தொகுப்பின் 26வது அத்தியாயம் “உம்ரா” வழிபாடு தொடர்பானதாகும். “உம்ரா” எனும் சொல்லுக்கு ‘சந்தித்தல்’ என்பது சொற்பொருளாகும். புனிதத் தலங்களைச் சந்திக்கும் வாய்ப்பு ‘உம்ரா’ வழிபாட்டில் கிடைப்பதால் அதற்கு இப்பெயர் வந்திருக்கலாம்.
புனித “கஅபா” சென்று அதைச் சுற்றி (தவாஃப்) வருதல், ஸஃபா – மர்வா மலைக்குன்றுகளுக்கிடையே ஓடுதல் (சயீ) ஆகிய கிரியைகளை நிறைவேற்றுவதே இஸ்லாமியர் வழக்கில் ‘உம்ரா’ எனப்படும். ஹஜ் வழிபாட்டிற்கு குறித்த காலம் உண்டு. “உம்ரா”வுக்கு குறிப்பிட்ட காலவரையறை கிடையாது. உம்ராவும் ஹஜ்ஜைப் போன்றே கட்டாயக் கடமைதான்; அதைச் செய்வதற்குச் சக்தியுள்ளோர் அதையும் செய்தாக வேண்டும் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். வேறுசில அறிஞர்கள், உம்ரா கூடுதல் வழிபாடு (சுன்னா) தான்; கட்டாயமல்ல என்கிறார்கள்.
அல் குர்ஆனில், “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்” (2:196)
புனித “கஅபா” சென்று அதைச் சுற்றி (தவாஃப்) வருதல், ஸஃபா – மர்வா மலைக்குன்றுகளுக்கிடையே ஓடுதல் (சயீ) ஆகிய கிரியைகளை நிறைவேற்றுவதே இஸ்லாமியர் வழக்கில் ‘உம்ரா’ எனப்படும். ஹஜ் வழிபாட்டிற்கு குறித்த காலம் உண்டு. “உம்ரா”வுக்கு குறிப்பிட்ட காலவரையறை கிடையாது. உம்ராவும் ஹஜ்ஜைப் போன்றே கட்டாயக் கடமைதான்; அதைச் செய்வதற்குச் சக்தியுள்ளோர் அதையும் செய்தாக வேண்டும் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். வேறுசில அறிஞர்கள், உம்ரா கூடுதல் வழிபாடு (சுன்னா) தான்; கட்டாயமல்ல என்கிறார்கள்.
அல் குர்ஆனில், “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்” (2:196)
STEP BY STEP TO DO UMRAH IN TAMIL BRIEFLY
உம்ரா நிய்யத்து தமிழில் Umrah niyyat in Tamil
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
அமல்களில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது” என்று விடையளித்தார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது” என்றார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
“ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் பலவீனனாக இருக்கிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “யுத்தமில்லாத ஜிஹாதுக்கு செல்வீராக! அதுதான் ஹஜ்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் பின் அலி (ரலி) நூல் : தப்ரானி
அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்;” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்; : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
ஹஜ் செய்பவர், உம்ராச் செய்பவர், போரில் ஈடுபட்டவர் ஆகிய மூவர் அல்லாஹ்வின் விருந்தினராவர் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : இப்னுஹிப்பான், இப்னுமாஜா
ஹஜ் செய்பவர்களும் உம்ராச் செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினராவர். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான் என்பதும் நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : நஸயீ, இப்னுமாஜா
இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் அறிவிக்கின்றன. அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுவதும், கேட்டவையாவும் கிடைப்பதும், மறுமையில் சுவனத்தைப் பரிசாக அடைவதும் உண்மை முஸ்லிம்களுக்குச் சாதாரண விஷயம் இல்லை.
HOW TO DO UMRAH IN TAMIL
தல்பியாவின் வாசகம் வருமாறு:நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைபா என்ற இடத்திலமைந்த பள்ளிக்கருகில் அவர்களின் வாகனம் எழுந்து நின்றதும், அதன் மேல் அமர்ந்து “அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.
இந்த பகுதியில் தவறு அல்லது பிழை இருந்தால் இந்த ஈமெயில் அணுகவும் amdileeyas@gmail.com பிறகு சரி பார்த்து திருத்த படும்.
அல்லாஹ் உங்களது இந்த உம்ராப் பயணமத்தை கபூல் செய்வானாக , அமீன் ரப்பில் ஆலமீன். உங்களுடைய துஆவில் இந்த அடியானுக்கும் துஆ செய்விராக.